அமெரிக்காவின் ஒரு மாநிலமான கலிபோர்னியாவின் பொருளாதாரம் 2024ம் ஆண்டு இதுவரை உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக இருந்த ஜப்பானின் பொருளாதாரத்தை பின் தள்ளி 4வது பெரிய பொருளாதாரம் ஆகியுள்ளது.
2024ம் ஆண்டில் கலிபோர்னியாவின் பொருளாதாரம் (GDP) $4.10 ட்ரில்லியன் ($4,100 பில்லியன்) ஆகவும் ஜப்பானின் பொருளாதாரம் $4.01 ட்ரில்லியன் ($4,010 பில்லியன்) ஆகவும் இருந்துள்ளன.
இந்த செய்தியால் ரம்புக்கு எதிரான Democratic கட்சி மாநில ஆளுநர் Gavin Newsom மேலும் உற்சாகம் அடைந்துள்ளார். இவர் 2028ம் ஆண்டில் அமெரிக்க சனாதிபதி போட்டியில் குதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
உலகின் பெரிய பொருளாதாரங்கள்:
1) அமெரிக்கா: $29.18 ட்ரில்லியன்
2) சீனா: $18.74 ட்ரில்லியன்
3) ஜேர்மனி: $4.65 ட்ரில்லியன்
4) கலிபோர்னியா: $4.10 ட்ரில்லியன் (ஒரு நாடு அல்ல)
5) ஜப்பான்: $4.01 ட்ரில்லியன்
அடுத்து வரும் பெரிய பொருளாதாரங்கள்:
இந்தியா $3.89 ட்ரில்லியன்,
பிரித்தானியா $3.59 ட்ரில்லியன்,
பிரான்ஸ் $3.17 ட்ரில்லியன்,
இத்தாலி $2.38 ட்ரில்லியன்,
கனடா $2.21 ட்ரில்லியன்.