இந்தியா தம்மை தாக்க திட்டமிடுகிறது, என்கிறது பாகிஸ்தான்

இந்தியா தம்மை தாக்க திட்டமிடுகிறது, என்கிறது பாகிஸ்தான்

இந்தியா சில தினங்களில் தம்மை தாக்க திட்டம் விரைகிறது என்று பாகிஸ்தான் புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதல் அடுத்த 24 முதல் 36 மணித்தியாலங்களில் இடம்பெறலாம் என்றும் பாகிஸ்தான் புதன்கிழமை கூறியுள்ளது.

ஆனால் இந்தியா பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து எதையும் இதுவரை தெரிவித்திருக்கவில்லை.

காஷ்மீரில் உள்ள Pahalgam என்ற இடத்தில் 26 உல்லாச பயணிகள் படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியா விடுத்த கட்டளைக்கு ஏற்ப இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர் இந்தியாவை விட்டு நீங்கி வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள இந்தியரும் இந்தியா செல்கின்றனர்.

இந்தியா பாகிஸ்தானுடன் செய்துகொண்ட ஆற்று நீர் உடன்படிக்கையில் இருந்து வெளியேறி உள்ளது. பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான் பரப்பை தடை செய்துள்ளது.

அமெரிக்கா, சீனா, பிரித்தானியா போன்ற நாடுகளும், ஐ.நா. வும் இந்தியாவையும், பாகிஸ்தானையும் முரண்பாட்டை தவிர்க்க கேட்டுள்ளன.