சீனா ஐரோப்பிய உறுப்பினர் மீதான தடையை நீக்கியது

சீனா ஐரோப்பிய உறுப்பினர் மீதான தடையை நீக்கியது

சீனா ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சிலர் மீது 2021ம் ஆண்டு முதல் நடைமுறை செய்திருந்த தடையை இன்று புதன் நீக்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சீனாவுக்கும் இடையில் முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கு வழி செய்யும் நோக்கிலேயே இந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு மொத்தம் 10 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மீது சீனா தடை விதித்து இருந்தாலும் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள 4 பேர் மீதான தடையை மட்டுமே சீனா நீக்கி உள்ளது. ஏனைய 6 பேர் மீதான தடைகள் தொடரும்.

அமெரிக்க சனாதிபதி ரம்பின் இறக்குமதி வரி இடர்களில் இருந்து தம்மை விடுவித்து அமெரிக்காவுக்கு அப்பால் தமது பொருளாதாரத்தை வார்க்கும் நோக்கிலேயே ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவும் ஒரு இணக்கத்துக்கு வருகின்றன. இரு தரப்பும் விரைவில் EU-China Comprehensive Agreement on Investment என்ற முதலீட்டு இணக்கத்தில் ஒப்பமிட உள்ளன.

மேற்படி தடை செய்யப்பட்ட ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி இன்றி சீனாவின் Uyghurs இஸ்லாமியர் வாழும் பகுதிக்கு செல்ல முயன்றதாலேயே சீனா இவர்கள் மீது தடை விதித்திருந்தது.