அமெரிக்க பொருளாதாரம் 0.3% ஆல் வீழ்ச்சி அடைந்தது 

அமெரிக்க பொருளாதாரம் 0.3% ஆல் வீழ்ச்சி அடைந்தது 

2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் (GDP) 0.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று இன்று புதன்கிழமை அமெரிக்க Commerce Department தெரிவித்துள்ளது. 

உண்மையில் இந்த காலாண்டுக்கு 0.3% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனாலும் ரம்பின் இறக்குமதி வரி யுத்தம் அமெரிக்காவுக்கு பொருளாதார வீழ்ச்சியை வழங்கியுள்ளது.

இதற்கு முந்திய பைடென் காலத்து காலாண்டில் (2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்த நாலாம் காலாண்டில்) அமெரிக்காவின் பொருளாதாரம் (GDP) 2.4% ஆல் வளர்ந்து இருந்தது.

இந்த காலாண்டு பொருளாதார வீழ்ச்சி ரம்ப் ஆட்சியில் இடம்பெற்றாலும், வழமை போலவே ரம்ப் இந்த வீழ்ச்சிக்கு முன்னாள் சனாதிபதி பைடென் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த காலாண்டிலும் பொருளாதாரம் (GDP) வீழ்ச்சி அடைந்தால் அது பொருளாதார முடக்கம் (recession) ஆக கணிக்கப்படும்.

மேற்படி பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதிகளை செய்ததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ரம்பின் புதிய இறக்குமதி வரிகளில் இருந்து தப்பவே இவ்வாறு அதிகரித்த இறக்குமதி இடம்பெற்றுள்ளது.