சனி பாகிஸ்தானும் புதிய ஏவுகணை பரிசோதித்தது 

சனி பாகிஸ்தானும் புதிய ஏவுகணை பரிசோதித்தது 

இன்று சனிக்கிழமை பாகிஸ்தானும் ஒரு புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. Abdali Weapon System என்ற இந்த ஏவுகணை 450 km தூரம் நிலத்தில் இருந்து நிலத்துக்கு பாய வல்லது என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதம் 27ம் திகதி இந்தியாவும் ஒரு புதிய வகை ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்திருந்தது. இந்தியாவின் இந்த ஏவுகணை கப்பல்களை தாக்கி அழிக்க பயன்படும்.

ஏப்ரல் மாதம் 22ம் திகதி Pahalgam என்ற இந்திய காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைக்கு 26 உல்லாச பயணிகள் பலியான பின் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் முறுகல் நிலையில் உள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் இரண்டு நாடுகளுக்கும் சண்டைக்கு செல்ல அழுத்தம் இருந்தாலும் விருப்பம் இல்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வர்த்தகம் முற்றாக துண்டிக்கப்பட்டு இருந்தாலும் கொழும்பு, சிங்கப்பூர், டுபாய் ஆகிய துறைகள் மூலம் இந்திய-பாகிஸ்தான் வர்த்தகம் தொடர்கிறது. இந்த வர்த்தகம் ஆண்டுக்கு $9 பில்லியன் என்று Global Trade Research Initiative கணிக்கிறது.

உதாரணமாக கொழும்பு வரும் Made in India பொருட்கள், கொழும்பு துறைமுகத்தில் ஆவணங்கள் Made in UAE என்ற மாற்றப்பட்டு பாகிஸ்தான் செல்லும்.

2016-2017 காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நேரடி வர்த்தகம் $2.27 பில்லியன் ஆகவும் 2017-2018 காலத்தில் அது $2.41 பில்லியன் ஆகவும் இருந்தது.