அஸ்ரேலியாவில் மீண்டும் பிரதமர் Anthony Albanese தலைமையிலான Labor கட்சி பெரும்பான்மை ஆட்சி அமைக்க போதுமான ஆசனங்களை பெற்றுள்ளது.
மொத்தம் 150 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் Labor கட்சி சுமார் 87 ஆசனங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இறுதி முடிவுகள் வெளியாக மேலும் சில தினங்கள் செல்லும்.
Labor கட்சிக்கு எதிராக போட்டியிட்ட Conservative கட்சி பாரிய தோல்வியை அடைந்துள்ளது. Conservative கட்சியின் தலைவர் Peter Dutton கடந்த 24 ஆண்டுகளாக தெரிவு செய்யப்பட்டிருந்த தனது தொகுதியில் இம்முறை தோல்வி அடைந்துள்ளார்.
முன்னைய அரசு நடைமுறை செய்திருந்த பல சீன எதிர்ப்பு சட்டங்களை Albanese பெருமளவில் தளர்த்தி மீண்டும் சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரித்திருந்தார். அஸ்ரேலியாவின் பொருட்களுக்கு சீனா அளவில் வேறு சந்தை இல்லை.
ஏப்ரல் மாதம் 2ம் திகதி அஸ்ரேலியா மீது ரம்ப் நடைமுறை செய்த புதிய இறக்குமதி வரிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த Albanese “This is not the act of a friend.” என்று கூறியிருந்தார்.