சிங்கப்பூரில் சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் People’s Action Party (PAP) பெரும்பான்மை ஆட்சிக்கு தேவையான ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் இந்த கட்சிக்கு 65.57% வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்த கட்சியின் 3 உறுப்பினர்கள் தமது தொகுதிகளில் 80% க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
தற்போது Lawrence Wong என்பவரின் தலைமையில் உள்ள இந்த கட்சி சிங்கப்பூரின் பெருமைக்குரிய தலைவர் லீ குவான் (Lee Kuan) ஆரம்பித்த கட்சியாகும்.
1968ம் ஆண்டு முதல் இன்று வரை இந்த கட்சியே சிங்கப்பூரை ஆண்டு வருகிறது. அதனால் உலகத்தில் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக ஆட்சி அமைக்கும் கட்சியாக PAP உள்ளது.
PAP கட்சி 87 ஆசனங்களை வென்று இருக்க, Pritam Singh தலைமையில் உள்ள எதிர்க்கட்சியான Workers’ Party (WP) 10 ஆசனங்களை வென்றுள்ளது.