உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று அமெரிக்காவின் WTI வகை மசகு எண்ணெய் விலை $2.49 ஆல் வீழ்ச்சி அடைந்து பரல் ஒன்று $55.80 ஆகியுள்ளது. அது சுமார் 4.27% விலை வீழ்ச்சி.
Brent வகை மசகு எண்ணெய்யும் $2.39 ஆல் வீழ்ச்சி அடைந்து பரல் ஒன்று $58.90 ஆகியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் மசகு எண்ணெய் விலைகள் சுமார் 20% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளன.
ரம்பின் இறக்குமதி வரி யுத்தம் காரணமாக உலக பொருளாதாரம் முடங்கும் என்றும், அவ்வாறு முடங்கும் உலக பொருளாதாரம் குறைந்த அளவு எரிபொருளை மட்டுமே பயன்படுத்தும் என்றும் சந்தை கருதுகிறது.
அதற்கும் மேலாக பிரதான எண்ணெய் உற்பத்தி நாடுகளான OPEC+ நாடுகளும் ஜூன் மாதம் முதல் நாள் ஒன்றுக்கான உற்பத்தியை 411,000 பரல்களால் அதிகரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளன. அதுவும் விலை வீழ்ச்சிக்கு காணரமாகி உள்ளது.