சுமார் 2,300 ஆண்டுகள் பழமையான Zidanku Silk Manuscripts என்ற ஏடுகள் அமெரிக்காவில் இருந்து இன்று ஞாயிறு மீண்டும் சீனா சென்றுள்ளன. இவை 1946ம் ஆண்டு John Hadley Cox என்பவரால் களவாக அமெரிக்காவுக்கு எடுத்து செல்லப்பட்டன.
இவை இன்றுவரை அமெரிக்காவின் Smithsonian அமைப்புக்கு சொந்தமான National Museum of Asian Art இல் இருந்தன.
இதுவரை சீனாவில் எடுக்கப்பட்ட ஏடுகளில் இவையே மிக பழையவை. இவற்றில் 3 தொகுதிகள் இருந்தாலும் Volume II ம், III ம் மட்டுமே இன்று சீனா செல்கின்றன. Volume I ஐயும் மீள பெற சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
இவை 1942ம் ஆண்டு மத்திய சீன நகரமான Changsha விலிருந்து Zidanku கல்லறையில் இருந்து திருடப்பட்டு இருந்தன.