கொழும்பில் மூடப்படும் NEXT ஆடை தயாரிப்பு நிறுவனம்

கொழும்பில் மூடப்படும் NEXT ஆடை தயாரிப்பு நிறுவனம்

கடந்த 40 ஆண்டுகளாக கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடை தயாரிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த NEXT என்ற பிரித்தானிய நிறுவனம் தனது ஆடை தயாரிப்பு வளாகத்தை மூடுகிறது.

இலங்கையில் ஆடை தயாரிப்புக்கான செலவு அதிகமாக உள்ளதாகவும், இந்த வர்த்தகம் கடந்த பல ஆண்டுகளாக நட்டத்தில் இயங்குகிறது என்றும் NEXT கூறியுள்ளது. ஆனால் குறிப்பாக எந்த செலவு அதிகரித்து உள்ளது என்று NEXT கூறவில்லை. பொதுவாக தொழிலாளர் ஊதியம் இலங்கையில் மிகையாக அதிகரித்து உள்ளதாக ஆய்வாளர் கூறுகின்றனர்.

மேற்படி மூடல் காரணமாக ஏற்கனவே 2,825 பேரை கொண்ட NEXT நிறுவதின் 1,416 பேர் தமது வேலைவாய்ப்பை இழப்பர். இவர்களுக்கு முறைப்படியான உதவி தொகைகள் வழங்கப்பட்டும் என்கிறது NEXT.

2024ம் ஆண்டு உலக அளவில் மொத்தம் $592.8 பில்லியன் பெறுமதியான ஆடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக Royal Europe Textile கூறுகிறது. கடந்த ஆண்டு ஆடை ஏற்றுமதியில் முன்னணியில்இருந்த நாடுகள்:

1) சீனா – $286 பில்லியன் 
2) பங்களாதேஷ் – $46.2 பில்லியன் 
3) வியட்நாம் – $43.7 பில்லியன் 
4) இந்தியா – $41.4 பில்லியன் 
5) ஜெர்மனி – $40.4 பில்லியன் 
6) துருக்கி – $35.7 பில்லியன் 
7) இத்தாலி – $35.4 பில்லியன் 
8) அமெரிக்கா – $24.6 பில்லியன் 
9) ஸ்பெயின் – $20.2 பில்லியன் 
10) பாகிஸ்தான் – $19.2 பில்லியன்