அமெரிக்க bond மதிப்பிழக்க தொடர்ந்தும் உரமாகும் சீன bond

அமெரிக்க bond மதிப்பிழக்க தொடர்ந்தும் உரமாகும் சீன bond

அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனா மீது பெரும் இறக்குமதி வரிகளை விதித்த பின் சீனாவை நோக்கிய வெளி நாடுகளின் முதலீடுகள் குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் மட்டும் சீன அரச மற்றும் தனியார் bond கடன்களை கொள்வனவு செய்வதன் மூலம் $17.3 பில்லியன் மேலதிக முதலீடு சீனா சென்றுள்ளது.

ஆனால் அமெரிக்க bond கடனுக்கான மதிப்பு குறைந்துள்ளது. Bond மதிப்பு குறைய அந்த முதலீட்டுக்கு முதலீட்டாளர் எதிர்பார்க்கும் வட்டியும் (yield) அதிகமாகும்.

அதனால் புதன்கிழமை $16 பில்லியன் பெறுமதியான 20-ஆண்டு அமெரிக்க அரச bond கடனை (Treasury) அமெரிக்கா 5.047% வட்டிக்கே விற்பனை செய்துள்ளது. இவ்வகை 20-ஆண்டு bond கடனை அமெரிக்கா கடந்த ஆண்டு சராசரியாக 4.613% வட்டிக்கு மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ரம்பின் புதிய வரவு செலவு திட்டம் அமெரிக்காவின் தற்போதைய $36 டிரில்லியன் கடனை மேலும் $3.8 டிரில்லியனால் அதிகரிக்கும்.