காசாவில் மீண்டும் ஒரு யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இம்முறை இந்த யுத்த நிறுத்தம் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அரசால் முன் வைக்கப்பட்டது.
ஹமாஸ் இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டாலும், இஸ்ரேல் இதுவரை தனது தீர்மானத்தை அறிவிக்கவில்லை.
இந்த யுத்த நிறுத்தம் நடைமுறை செய்யப்பட்டால் 10 இஸ்ரேல் கைதிகள் இரண்டு குழுக்களாக விடுதலை செய்யப்படுவர். யுத்த நிறுத்தம் 70 தினங்களுக்கு நீடிக்கும்.
முன்னாள் சனாதிபதி பைடென் நடைமுறை செய்த யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் மார்ச் 18ம் திகதி முறித்துக்கொண்டது.