இந்தியாவும் தற்போது stealth யுத்த விமான தயாரிப்பு முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த அறிவிப்பை இந்திய பாதுகாப்பு அமைச்சர் நேற்று செவ்வாய் அறிவித்துள்ளார்.
அண்மையில் பாகிஸ்தானுடனான யுத்தத்தில் இந்தியா தனது யுத்த விமானங்கள் பலவற்றை இழந்து இருந்தது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய J-10 வகை stealth விமானங்களே இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என்று இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் இந்தியா 2 Rafale வகை நவீன விமானங்களை இழந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தியா தீரென யுத்தத்தில் இருந்து பின்வாங்க இந்தியா இழந்த யுத்த விமானங்கள் காரணமாக இருக்கலாம். இந்தியா புதிய stealth விமானங்களை சேவைக்கு கொண்டுவர பல ஆண்டுகள் தேவைப்படும்.
இந்தியாவுக்கு குறைந்தது 42 squadrons யுத்த விமானங்கள் தேவை. ஆனால் இந்தியாவிடம் தற்போது 29 squadrons மட்டுமே உண்டு. ஒரு squadron இல் 16 முதல் 18 யுத்த விமானங்கள் இருக்கும்.