ரம்ப், மஸ்க் மோதல், $150 பில்லியனை இழந்தது Tesla 

ரம்ப், மஸ்க் மோதல், $150 பில்லியனை இழந்தது Tesla 

அமெரிக்க சனாதிபதி ரம்பின் இரண்டாம் ஆட்சி காலத்தில், இதுவரை ரம்பின் வலது கரமாக இருந்த இலான் மஸ்க்குக்கும் (Elon Musk) ரம்புக்கும் இடையில் முரண்பாடுகள் உக்கிரம் அடைந்துள்ளன. 

ரம்ப் Tesla போன்ற நிறுவங்களை பழிவாங்கக்கூடும் என்ற பயத்தால் வியாழன் Tesla பங்கு சந்தை பெறுமதி சுமார் $150 பில்லியனை அல்லது 14% பெறுமதியை இழந்துள்ளது.

ரம்ப் “big and beautiful” என்று அழைத்த அவரது வரவு-செலவு திட்டத்தை இலான் மஸ்க் “disgusting abomination” என்று அழைத்தமையே முரண்பாடு ஆரம்பிக்க காரணம்.

ரம்ப் தான் மார்ச் மாதம் கொள்வனவு செய்திருந்த Tesla காரை விற்பனை செய்வார் அல்லது தானம் வழங்குவார் என்று வெள்ளை மாளிகை கூறுகிறது.