G7 அமர்வுக்கு கனடா செல்கிறார் பிரதமர் மோதி 

G7 அமர்வுக்கு கனடா செல்கிறார் பிரதமர் மோதி 

கனடிய பிரதமர் மார்க் கார்னி விடுத்த G7 அமர்வுக்கான அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோதி கனடா செல்லவுள்ளார். கார்னி வெள்ளிக்கிழமை விடுத்த அழைப்பை உடனடியாக ஏற்று கொண்டுள்ளார்.

ஒரு கையில் இந்திய உளவுப்படை கனடாவில் கனடிய சீக்கியரை படுகொலை செய்தது என்ற குற்றச்சாட்டை கொண்டிருக்கையில் மறு கையால் அழைப்பையும் விடுத்துள்ளது கனடா.

கனடா இந்திய பிரதமரை அழைப்பதால் ஆவேசம் கொண்டுள்ளன World Sikh Organization of Canada போன்ற கனேடிய சீக்கிய அணிகள்.

இரண்டு நாடுகளும் அண்மையில் மறுதரப்பு தூதரக அதிகாரிகளை தமது நாடுகளில் இருந்து வெளியேற்றியும் இருந்தன.

G7 அமர்வு ஜூன் 15 முதல் 17 வரை கனடாவின் Alberta மாநிலத்தில் நடைபெறும்.