அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்து Los Angeles நகரில் ரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. இவற்றை அடக்க 2,000 National Guards படையினர் அனுப்பப்பட்டு உள்ளனர்.
இந்த படையினர் அங்கு 60 தினங்களுக்கு நிலைகொள்வர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
படையினர் அனுப்பப்பட்டதை அந்த மாநில ஆளுநர் “purposefully inflammatory” என்று சாடியுள்ளார்.
குறைந்தது 44 பேர் ICE (Immigration and Customs Enforcement) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின் வெள்ளி ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெறுகின்றன.