கனடாவும், இந்தியாவும் மீண்டும் தமது தூதரகங்களை இயக்க செவ்வாய்க்கிழமை இணங்கி உள்ளன. இந்தியா மீது கனடா முரண்பட காரணமாக இருந்த சீக்கிய படுகொலை விசாரணை பின்தள்ளப்பட்டு உள்ளமை தெரிகிறது.
இரண்டு நாடுகளும் புதிய தூதர்களை நியமனம் செய்யவும் இணங்கி உள்ளன.
கனடியரான Hardeep Singh Nijjar என்ற புஞ்சாப் மாநில பிரிவினை ஆதரவாளியை 2023ம் ஆண்டு கனடாவின் வான்கூவர் நகரில் வைத்து இந்தியா படுகொலை செய்திருந்தது என்ற பாரதூர குற்றச்சாட்டை கனடா கைவிட்டு உள்ளது.
ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில் இடம்பெற்ற G7 அமர்வுக்கு இந்திய பிரதமர் மோதி, சவுதி இளவரசர் Mohammed bin Salman ஆகிய இருவரையும் கனடாவுக்கு அழைத்தமை கனடாவின் விருப்புக்கு பதிலாக ரம்பின் திணிப்பாக இருக்கலாம்.
ஆனாலும் சவுதி இளவரசர் கனடிய G7 அமர்வுக்கு வரவில்லை, காரணமும் கூறவில்லை.