மும்பாய் நகரை உள்ளடக்கிய மஹாராஸ்ரா மாநிலத்திலும் ஹிந்தி எதிர்ப்பு வன்முறைகள் தலைதூக்கி உள்ளன. ஏப்ரல் மாதம் மஹாராஸ்ரா மாநிலத்து பாடசாலைகளில் மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு அடுத்து ஹிந்தியும் கட்டாயம் படிக்க வேண்டிய மூன்றாம் மொழி ஆக்கப்பட்டமையே கிளர்ச்சிகளுக்கு காரணம்.
மேற்படி கட்டாய மும்மொழி கொள்கை மத்தியில் பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ. கட்சியால் நடைமுறை செய்யப்பட்டது. தமிழ்நாடு போன்ற வேறு மாநிலங்களிலும் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு உண்டு.
எதிர்ப்பு காரணமாக இந்த மும்மொழி கொள்கை மஹாராஸ்ரா மாநிலத்தில் தற்போது இடைநிறுத்தப்பட்டு, ஆராயப்படுகிறது.
ஒரு காலத்தில் தமிழர் போன்ற தெற்கு மாநிலத்தவர் மும்பாய் சென்று வேலைவாய்ப்புகளை பறிப்பதால் தென் மாநிலத்தவர் மீது அங்கே வெறுப்பு இருந்தது. தற்போது அந்நிலை மாறி, ஹிந்தி பேசும் வளர்ச்சி அடையாத வடக்கு மாநிலத்தவர் மும்பையை ஆக்கிரமிக்கின்றனர். இதுவும் ஹிந்தி மொழி மீதான வெறுப்புக்கு காரணம்.
2001ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011ம் ஆண்டில் மஹாராஸ்ரா மாநிலத்தில் வாழும் ஹிந்தி பேசுவோர் தொகை 40% அதிகரித்து உள்ளது என்கிறது சனத்தொகை கணக்கெடுப்பு.