சீனா 600 km/h வேகத்தில் பயணிக்கவல்ல ரயில் ஒன்றை கடந்த கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இது maglev வகை (magnetic levitation) ரயில் ஆகும்.
இந்த ரயில் 1,200 km நீளமான பெய்ஜிங்-ஷாங்காய் பயணத்தை 2.5 மணித்தியாலத்தில் முடிக்கும்.
Maglev ரயில்களுக்கு சக்கரம் இல்லை. இவை காந்தமாக்கப்பட்ட பாதையில் நிலத்தில் தொடாது பயணிக்கும். 2003ம் ஆண்டு முதல் ஜெர்மனி தயாரித்த maglev ரயில் ஒன்று ஷாங்காய் நகரில் உல்லாச பயணிகளை கவர நீண்ட காலமாக சேவையில் உள்ளது. இதன் அதி உயர் வேகம் 431 km/h மட்டுமே.
சீனாவில் கடந்த ஆண்டு முடிவில் 48,000 km நீள ரயில் பாதைகள் இருந்தன. இந்த ஆண்டு முடிவில் அது 50,000 km ஆக அதிகரிக்கும்.
சீனா ரயில் துறையில் வேகமாக வளர, அமெரிக்க ரம்ப் அரசு வேகமாக எதிர் திசையில் செல்கிறது. கலிபோர்னியா மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள நடுத்தர வேக ரயில் திட்டத்துக்கான மத்திய அரசின் $4 பில்லியன் கொடுப்பனவை சனாதிபதி ரம்ப் நிறுத்தி உள்ளார்.
அதேவேளை சீனாவின் பெய்ஜிங் நகரில் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள China International Supply Chain Expo என்ற வர்த்தக சந்திப்பில் கலந்துகொள்ள 8 பெரிய அமெரிக்க நிறுவனங்கள் விரைந்துள்ளன.