அமெரிக்காவா, ரஷ்யாவா? மோதிக்கு ரம்பால் நெருக்கடி

அமெரிக்காவா, ரஷ்யாவா? மோதிக்கு ரம்பால் நெருக்கடி

இந்திய பிரதமர் மோதியின் அரசு உலக அரங்கில் நடைமுறைக்கு மிக கடினமான ஒரு செயலை செய்ய முனைகிறது. பரம எதிரிகளான அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் ஒரே நேரம் நட்பு நாடாக இருக்க முனைவதே அச்செயல்.

மோதியின் இந்த முனைவுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்து உள்ளார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். யூக்கிறேன் யுத்தம் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா கொள்வனவு செய்யக்கூடாது என்கிறார் ரம்ப். ஆனால் இந்தியா ரஷ்யாவை பகைக்க விரும்பவில்லை. ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் இந்தியா ஒரே நேரம் பகைப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல.

அத்துடன் ரஷ்யாவின் எண்ணெய்யை மலிவு விலைக்கே இந்தியா கொள்வனவு செய்கிறது. இந்தியா தினமும் 1.75 மில்லியன் பரல்கள் ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

இந்தியா ரஷ்யாவின் ஆயுதங்களை கொள்வனவு செய்வதையும் ரம்ப் விரும்பவில்லை. ரஷ்யாவின் S-400 வகை ஏவுகணைகளை இந்தியா கொள்வனவு செய்கிறது.

இந்த முரண்பாடுகள் காரணமாகவே ரம்ப் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி அறிவித்து இருந்தார். இந்தியாவுக்கு எதிராக மேலும் சில தடைகள் அறிவிக்கப்படும் என்றும் ரம்ப் மிரட்டி உள்ளார்.