இந்த மாத இறுதியில் இந்திய பிரதமர் மோதி சீனா செல்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க சனாதிபதி ரம்ப் இந்தியா மீது 50% இறக்குமதி வரி அறிவித்த நிலையிலேயே மோதி சீனா செல்கிறார்.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 31ம் திகதிகளில் பெய்ஜிங் நகருக்கு அண்மையில் உள்ள Tianjin என்ற நகரில் இடம்பெறவுள்ள Shanghai Cooperation Organisation (SCO) அமர்வில் மோதி கலந்துகொள்வார்.
2020ம் ஆண்டு Galwan என்ற இந்திய-சீன எல்லையில் இடம்பெற்ற வன்முறைகளின் பின் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை தற்போது வேகமாக தணிந்து வருகிறது.
மோதியின் சீன பயணம் ரம்புக்கு மோதி மீதான விசனத்தை அதிகரிக்கலாம்.