ரஷ்ய சனாதிபதி பூட்டினை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15ம் திகதி அலாஸ்க்காவில் (Alaska) சந்திக்க உள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா தரப்பில் Yuri Ushakov இரு தலைவர்களும் சந்திக்க தகுந்த இடம் என்றுள்ளார்.
ரம்ப் முன்வைக்கும் சமாதான திட்டப்படி ரஷ்யா தற்போது கைப்பற்றியுள்ள யூக்கிறேனின் நிலங்கள் சட்டப்படி ரஷ்ய நிலங்கள் ஆகும். அத்துடன் 2014ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரைமியாவும் (Crimea) சட்டப்படி ரஷ்ய நிலங்கள் ஆகும். அத்துடன் யூக்கிறேன் NATO அணியில் இணைவதும் தடுக்கப்படும்.
அப்படியானால் இது ஒரு தீர்வு ஆக அமையாது. பதிலுக்கு இது யூக்கிறேன் இன்றி சரண் அடைதல் ஆகும். ரஷ்யா தற்போது சுமார் 20% யூக்கிறேனை ஆக்கிரமித்து உள்ளது.
யூக்கிறேனும், ஐரோப்பிய நாடுகளும் இதுவரை கருத்து எதையும் கூறவில்லை.