ஆப்கானிஸ்தானில் பிறந்த, அமெரிக்க குடியுரிமை பெற்ற Mohmood Habibi என்பவரை தேடுகிறது அமெரிக்கா. இவரின் இருப்பிடத்தை அறிய அல்லது இவரை விடுதலை செய்ய உதவுவருக்கு $5 மில்லியன் சன்மானமும் வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
Habibi ஒரு CIA உளவாளி என்றும், இவரின் உதவியுடனேயே CIA அல்-கைடா தலைவர் Ayman al-Zawahiri யை படுகொலை செய்தது என்று கூறுகிறது தற்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலபான். இவரை ஆப்கானிஸ்தானின் உளவு பிரிவான GDI கைது செய்துள்ளது என்கிறது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் பிறந்த Habibi 2008 ஆண்டு UN civil aviation அமைப்பில் தொழில் ஒன்றை பெற்றிருந்தார். இவர் 2011 முதல் 2013 வரை அமெரிக்க தூதரகத்து Federal Aviation பிரிவில் தொழில் பெற்றார். பின் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கிய ஆப்கானிஸ்தான் அரசில் உதவி civil aviation அமைச்சர் ஆகி, 2017ம் ஆண்டு முதல் civil aviation அமைச்சர் ஆனார்.
அதேவேளை இவர் அமெரிக்க புளோரிடா மாநிலத்து Embry Riddle பல்கலைக்கழகத்தில் master’s பட்டமும் பெற்றார்.
2019ம் ஆண்டு அமைச்சர் பதவியை விலகிய இவர் காபூல் விமான நிலையத்தின் விமானங்களை கையாளும் ARX என்ற அமெரிக்க நிறுவனத்தில் இணைந்தார்.
2021ம் ஆண்டு இவர் அமெரிக்க குடியுரிமையும் பெற்றார்.
2021ம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு நீங்கிய காலத்தில் இவர் காபூலில் இருந்துள்ளார்.
2022ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் திகதி இவர் டுபாய் நகரில் இருந்து கட்டர் சென்று அங்குள்ள அமெரிக்க தளத்தில் தங்கியிருந்த அவரின் குடும்பத்தை சந்தித்து பின் காபூல் சென்று இருந்தார். அங்கு இவர் கடத்தப்பட்டார்.
ARX நிறுவனம் காபூலில் அமைத்த cell phone tower களில் வீடியோ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அவற்றை CIA ஊடுருவி இருந்தது. அவற்றில் ஒன்று ஆப்கானிஸ்தான் உதவி அமைச்சர் ஒருவரின் வீட்டை நோக்கி இருந்துள்ளது. அந்த வீட்டில் இருந்த Zawahiri பின் அமெரிக்காவின் Hellfire R9X ஏவுகணைக்கு பலியானார்.