கடந்த சில கிழமைகளாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாளை வெள்ளி பிரதமர் மோதி சீனா செல்ல உள்ள நிலையில் திங்கள் சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi டெல்லி செல்லவுள்ளதாகவும் அறியப்படுகிறது.
ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரியை அறிவித்தமை அமெரிக்கா மீது, குறிப்பாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் மீது மோதி அரசு கொண்ட நம்பிக்கை இல்லாதொழிய ஒரு காரணம்.
சீன வெளியுறவு அமைச்சர் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் Ajit Doval, வெளியுறவு அமைச்சர் Subramanyam Jaishankar ஆகியோரை சந்திப்பார்.
சீன வெளியுறவு அமைச்சரின் இந்த பயணத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று இந்திய-சீன எல்லையில் இருதரப்பு படைகளின் எண்ணிக்கையை குறைப்பதே.
அடுத்த மாதம் முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் நேரடி விமான சேவைகள் ஆரம்பமாக உள்ளன.