மாம்பழ இனிப்பு உடலுக்கு நல்லதாம், கூறுவது ஆய்வு 

மாம்பழ இனிப்பு உடலுக்கு நல்லதாம், கூறுவது ஆய்வு 

இந்தியாவில் செய்யப்பட்ட இரண்டு ஆய்வுகள் மாம்பழத்தில் உள்ள இனிப்பு (sugar) உடலுக்கு நல்லது என்று அறிந்துள்ளன. இந்த ஆய்வுகள் விரைவில் ஐரோப்பாவின் Journal of Clinical Nutrition என்ற ஆய்வு பதிப்பில் வெளிவரவுள்ளது.

பொதுவாக வைத்தியர்கள் எந்த வகை இனிப்பும் Type 2 diabetes குறைபாடு உள்ளோர்க்கு தகாது என்றே கூறி வந்துள்ளனர். தற்போது அதே வைத்தியம் முரண் கதை கூறுகிறது.

ஒரு ஆய்வுக்கு 95 பேர் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு Safeda, Dasheri, Langra ஆகிய 3 மாம்பழங்களும் வெள்ளை பாணும் உட்கொள்ள வழங்கப்பட்டு, அடுத்த 2 மணித்தியாலங்களுக்கு glucose testing செய்யப்பட்டது. மாம்பழம் உடகொண்டோரின் இரத்தத்தில் sugar வேறுபாடு மிக குறைவாகவே இருந்துள்ளது.

Journal of Diabetes & Metabolic Disorders எட்டு கிழமைகள் செய்த இரண்டாம் ஆய்வு முதலாவது ஆய்வை உறுதி செய்துள்ளது. இந்த ஆய்வில் 35 Type 2 குறைபாடு உள்ளோர்க்கு காலையில் பாணுக்கு 250g மாம்பழம் வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

உலக மாம்பழ உற்பத்தியில் 40% இந்தியாவில் பயிரிடப்படுகின்றன. செல்வந்தர் முகேஷ் அம்பானியிடமே இந்தியாவின் மிக பெரிய மாம்பழ தோட்டம் உள்ளது. இவரின் 300 ஏக்கர் தோட்டத்தில் 130,000 மாமரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.