அமெரிக்க சனநாயகம் ஆபத்தில் என்கின்றனர் 57% அமெரிக்கர் 

அமெரிக்க சனநாயகம் ஆபத்தில் என்கின்றனர் 57% அமெரிக்கர் 

கருத்து கணிப்பு ஆய்வு ஒன்றின்படி அமெரிக்க சனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று 57% அமெரிக்கர் கருதுகின்றனர்.

Reuters/Ipsos ஆய்வினர் இந்த மாதம் 13ம் திகதி முதல் 18ம் திகதி வரை 4,446 அமெரிக்கரிடம் “Is American democracy in danger of failing?” என்று கேட்டபோது 57% அமெரிக்கர் “Yes” என்று பதிலளித்து உள்ளனர்.

தற்போது ஆட்சியில் உள்ள சனாதிபதி ரம்பின் Republican கட்சியினரை இந்த கேள்வியை கேட்டபோது 37% மட்டுமே Yes என்று பதிலளித்து உள்ளனர். ஆனால் Democratic கட்சினரை மட்டும் கேட்டபோது 82% மானோர் Yes என்று பதிலளித்து உள்ளனர். கட்சி சார்பு அற்றோரில் 55% மானோர் Yes என்று பதிலளித்து உள்ளனர்.

ரம்ப் கட்சியினரில் 37% மானோர் மட்டுமே ரம்பின் போக்கை வெறுக்க ஆரம்பித்தாலும் ஏறக்குறைய அரைவாசியாக பிரிந்துள்ள அமெரிக்கர் மத்தியில் இந்த மாற்றம் Republican கட்சிக்கு அடுத்த தேர்தல்களில் ஆபத்தாக அமையலாம்.

அத்துடன் 55% அமெரிக்கர் தேர்தல் வட்டாரங்களை தமது வெற்றிக்கு வசதியாக கட்சிகள் மாற்றி அமைப்பதையும் (gerrymandering) வெறுக்கின்றனர். ரம்பின் Republican கட்சி House இல் தான் தற்போது கொண்டுள்ள 219:212 வெற்றியை நீடிக்க வசதியாக தேர்தல் மாவட்டங்களை மாற்றி வருகிறது.