காசாவில் மனிதம் உருவாக்கிய பட்டினி என்கிறது ஐ.நா.

காசாவில் மனிதம் உருவாக்கிய பட்டினி என்கிறது ஐ.நா.

காசாவின் பகுதிகளில் மனிதம் உருவாக்கிய பட்டினி கொடுமை பரவி உள்ளது என்று ஐ.நா.வின் அமைப்பான IPC (The Integrated Food Security Phase Classification) இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளது. குறிப்பாக Gaza City இந்த மனிதம் உருவாக்கிய பட்டினி கொடுமையில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் இஸ்ரேலும், காசாவில் பொருட்களை வழங்கும் பணிகளை கண்காணிக்கும் இஸ்ரேலின் COGAT அமைப்பும் அங்கு பட்டினி இல்லை என்று கூச்சம் இன்றி கூறுகிறது.

IPC காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்யவும், தடைகள் எதுவுமின்றி உணவு, மருந்து பொருட்கள் அங்கு செல்ல வழிகள் செய்யவும் கேட்டுள்ளது.

கடந்த மாதம் காசாவில் real starvation உள்ளதாக சனாதிபதி ரம்ப் கூறியிருந்தார்.

இதற்கும் முன் 2011ம் ஆண்டு சோமாலியாவிலும், 2017ம் ஆண்டு தென் சூடானிலும் பட்டினி நிலவியதாக IPC கூறியிருந்தது.