ஜெனெரலின் பதவி பறிப்பு, ஆய்வு ரம்புக்கு சாதகம் இல்லையாம் 

ஜெனெரலின் பதவி பறிப்பு, ஆய்வு ரம்புக்கு சாதகம் இல்லையாம் 

அமெரிக்க Defense Intelligence Agency (DIA) என்ற இராணுவ ஆய்வு பிரிவின் இயக்குனர் (director) ஆக பதவி வகித்த லெப். ஜெனரல் Jeffrey Kruse வெள்ளிக்கிழமை அவரின் பதவியில் இருந்து ரம்ப் அரசால் நீக்கப்பட்டுள்ளார். 

இவரின் பதவி பறிப்புக்கு ரம்ப் அரசு காரணம் எதையும் கூறியிருக்கவில்லை. ஆனாலும் இந்த ஜெனரல் ரம்ப் தான் ஜூன் மாதம் ஈரான் அணு உலைகள் மீது B-2 விமானங்கள் மூலம் வீசிய குண்டுகள் அந்த உலைகளை “completely and totally obliterated” என்று கூறியதற்கு முரணாக ஆய்வு அறிக்கையை தயாரித்ததே காரணம்.

தாக்குதலுக்கு முன் ஈரான் பிரதான யுரேனிய பொருட்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி இருந்துள்ளது என்று Kruse கூறியததையும் ரம்ப் விரும்பவில்லை.

அத்துடன் Navy Reserve பிரிவுக்கு தலைமை தாங்கிய உதவி அட்மிரல் Nancy Lacore, Navy SEAL Rear அட்மிரல் Milton Sands ஆகியோரும் பதவிகளில் இருந்து காரணம் இன்றி நீக்கப்பட்டுள்ளனர்.

ரம்புக்கு ஆதரவான, சாதகமான தரவுகளை வெளியிடாது, உண்மைகளை வெளியிடும் அதிகாரிகள் படிப்படியாக பழிவாங்கப்பட்டு வருகின்றனர்.