திங்கள் Nasser Medical Complex என்ற காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் இராணுவம் வீசிய இரண்டு குண்டுகளுக்கு குறைந்தது 20 பேர் பலியாகி உள்ளனர். அதில் 5 பேர் பத்திரிகையாளர், பலர் வைத்திய ஊழியர்.
வைத்தியசாலை கட்டிடம் ஒன்றின் 4ம் மாடிக்கு வீசப்பட்ட முதல் குண்டுக்கு ஒருவர் மட்டுமே பலியாகி இருந்தார். அதே இடத்தில் சுமார் 10 நிமிடங்களின் பின் திட்டமிட்டு வீசிய இரண்டாம் குண்டுக்கு உதவிக்கு வந்த ஏனையோர் பலியாகினர்.
இராணுவங்கள் இவ்வாறு இரண்டு குண்டுகளை ஒரே இடத்தில் வீசுவது (double-tap) அழிவை பல மடங்காக அதிகரிக்கவே. முதல் குண்டுக்கு பலியானோரை, காயப்பட்டோரை மீட்க வருவோரை அழிக்கவே இரண்டாம் குண்டு சில நிமிடங்களில் வீசப்படும்.
பலியான பத்திரிகையாளர் Reuters, the Associated Press, Al Jazeera போன்ற முன்னணி பத்திரிகை நிறுவங்களுக்கு சேவை செய்பவர்கள்.
வழமைபோலவே இந்த தாக்குதலுக்கும் ஐ.நா., பிரித்தானியா, ஜெர்மனி, கனடா, சுவிஸ், சவுதி ஆகிய நாடுகள் முதலை கண்ணீர் விட்டுள்ளன.