Federal Reserve என்ற அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநர் Lisa Cook கின் பதவியை பறித்துள்ளதாக திங்கள் அவருக்கு அனுப்பிய கடிதத்தில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். ஆனால் ரம்புக்கு அந்த உரிமை உள்ளதா என்பது கேள்விக்குறியே.
Lisa Cook தான் பதவியை தொடர உள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கியின் 111 ஆண்டு வரலாற்றில் இவ்வாறு மத்திய வங்கி ஆளுநர் ஒருவரின் பதவியை சனாதிபதி பறிக்க முனைவது இதுவே முதல் தடவை.
அமெரிக்க சனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் ஒருவரின் பதவியை தகுந்த காரணத்துக்கு (cause) பறிக்க சட்டத்தில் இடம் உண்டு என்றாலும் Lisa Cook மீது இதுவரை வழக்குகள் எதுவும் தாக்கல் செய்யப்படவும் இல்லை, இவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவும் இல்லை.
Lisa Cook ஒரே காலத்தில் 2 வீடுகளை தனது பிரதான வதிவிடம் என்று பதிந்து mortgage எடுத்து இருந்தார் என்று Federal Housing Finance கூறியதை Justice Department விசாரணை செய்ய உள்ளதாக மட்டுமே அறிவித்துள்ளது.