ரம்பை மிரள வைத்த சீன இராணுவ அணிவகுப்பு 

ரம்பை மிரள வைத்த சீன இராணுவ அணிவகுப்பு 

இன்று புதன் பெய்ஜிங்கில் சீனா அரங்கேற்றிய இராணுவ அணிவகுப்பு அமெரிக்க சனாதிபதி ரம்பை பல முனைகளில் மிரள வைத்துள்ளது. ரஷ்யாவின் பூட்டின், வட கொரியாவின் கிம் உட்பட பல தலைவர்கள் இந்த அணிவகுப்பை சீயுடன் இணைந்து பார்வையிட்டனர்.

அணிவகுப்பால் மிரண்ட அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீன சனாதிபதி சீ ரஷ்யாவின் பூட்டினுடனும், வட கொரியாவின் கிம்முடனும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதாக கூறியுள்ளார்.

குறிப்பாக அனுவகுப்பில் பங்கு கொண்ட புதிய ஆயுதங்கள் ரம்ப் போன்ற மேற்கின் தலைவர்களை வியக்க வைத்துள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு.

DF-61 என்ற சீனாவின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) பல குண்டுகளை காவ வல்லது. 2019ம் ஆண்டு அறிமுகமான DF-41 க்கு அடுத்து தற்போது DF-61 அறிமுகமாகி உள்ளது.

அணிவகுப்பில் சென்ற LY-1 என்ற laser ஆயுதம் எவ்வாறு எதிரியை தாக்கும் என்பது இதுவரை அறியப்படவில்லை. இது முற்றிலும் புதிய ஆயுதம்.

அணிவகுத்து YJ-17, YJ-19, YJ-21 ஆகிய hypersonic ஏவுகணைகள் கப்பல்களை தாக்க வல்லன.

AJX002 என்ற ஆளில்லா (drone) நீர்மூழ்கியும் முற்றிலும் புதியதோர் ஆயுதம். இது 18 மீட்டர் நீளமானது, அணு குண்டை காவ வல்லது.

அமெரிக்கா 2024ம் ஆண்டு $997 பில்லியனை இராணுவத்தில் செலவிட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள சீனா $314 பில்லியனை இராணுவத்தில் செலவிட்டுள்ளது. ரஷ்யா $149 பில்லியனை இராணுவத்தில் செலவிட்டுள்ளது.