ரம்பின் 50% வரி இந்திய செல்வந்தரை பெரிதும் பாதிக்கும் 

ரம்பின் 50% வரி இந்திய செல்வந்தரை பெரிதும் பாதிக்கும் 

ரம்ப் இந்திய பொருட்கள் மீது திணித்த 50% இறக்குமதி வரி இந்தியாவின் பெரும் செல்வந்தர்களை அதிகம் பாதிக்க உள்ளது.

சீனாவுடன் அமெரிக்கா முரண்பட ஆரம்பித்த காலம் முதல் இந்தியா தனது பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வழி கிடைத்தது. ஆனால் அந்த ஏற்றுமதி தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது செல்வந்தர் முகேஷ் அம்பானி ($97.7 பில்லியன்), கெளதம் அதானி ($77.9 பில்லியன்), லட்சுமி மித்தால் ($25.4 பில்லியன்), விக்ரம் லால் ($11.1 பில்லியன்) போன்ற செல்வந்தர்கள் கொண்டுள்ள செல்வங்களின் அளவு குறையும்.

கடந்த ஆண்டு அமெரிக்கா $87.3 பில்லியன் பெறுமதியான இந்திய பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. தைத்த ஆடைகள், உலோகங்கள், ஆபரணங்கள், கடல் உணவுகள், இரசாயணங்கள் ஆகியனவும் இப்பொருட்களில் அடங்கும்.