வெள்ளி மீண்டும் ஐ.நாவில் பலஸ்தீனர் நாட்டுக்கு பெரும் ஆதரவு 

வெள்ளி மீண்டும் ஐ.நாவில் பலஸ்தீனர் நாட்டுக்கு பெரும் ஆதரவு 

வெள்ளிக்கிழமை ஐ.நாவின் பொதுச்சபையில் (General Assembly) இடம்பெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனர்களுக்கான நாட்டுக்கு (two-state solution) 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்து உள்ளன. 10 நாடுகள் எதிர்க்க, 12 நாடுகள் வாக்களியாது விலகி இருந்தன.

ஆனாலும் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட New York Declaration என்ற இந்த தீர்மானம் சட்டபடியானது அல்ல. ஐ.நாவில் பாதுகாப்பு சபையே பலம் கொண்டது, பொதுச்சபை ஒரு கண்துடைப்பு மட்டுமே.

எதிர்த்து வாக்களித்த நாடுகளில் ஆர்ஜென்டீனா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியன பிரதானம். ஆதரவாக வாக்களித்த நாடுகளில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகியன பிரதானம். இம்முறை மேற்கு நாடுகளான கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியனவும் ஆதரவாக வாக்களித்து உள்ளன. இலங்கையும் ஆதரவாக வாக்களித்து உள்ளது.

இந்த தீர்மானம் பிரான்ஸ், சவுதி உட்பட்ட நாடுகளால் ஜூலை மாதம் முன்மொழியப்பட்டு இருந்தது.

இந்த வாக்களிப்புக்கு சில மணித்தியாலங்கள் முன்னர் இஸ்ரேல் பிரதமர் பலஸ்தீனர் நாடு என்று ஒன்று இல்லை என்று கூறியிருந்தார்.

செப்டம்பர் 22ம் திகதி உலக தலைவர்கள் ஐ.நாவில் கூடுவர். இங்கே கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் பலஸ்தீனர் நாட்டை ஏற்றுக்கொள்வர். ஆனாலும் அமெரிக்காவிடம் வீட்டோ வாக்கு இருக்கையில் இதில் பயன் ஏதும் உண்டா என்பது கேள்விக்குறியே.