பர்மாவில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்திருந்த 40 ரோஹிங்கியா அகதிகளை இந்தியா கடத்தி சென்று பர்மா கரையோர கடலில் கைவிட்டு உள்ளது என்று கூறுகிறது அமெரிக்காவின் CNN செய்தி நிறுவனத்தின் ஆய்வு செய்தி. இந்த அகதிகள் தற்போது தொலைந்து உள்ளனர்.
2017ம் ஆண்டு தமது வீடுகளில் இருந்து பர்மா இராணுவத்தால் விரட்டப்பட்ட மேற்படி 13 பெண்களும், 27 ஆண்களும் இந்தியா சென்று அகதிகளாக பதிந்து உள்ளனர்.
இந்த ஆண்டு மே மாதம் 6ம் திகதி இந்திய அதிகாரிகள் இவர்களை புதிய biometric அடையாள அட்டை பெற வருமாறு அழைத்து, 7ம் திகதி பிற்பகல் 2:20 மணிக்கு அந்தமான் தீவுக்கு Airbus A321 விமானம் மூலம் கடத்தி, அங்கிருந்து கப்பல் மூலம் பர்மா கரைக்கு எடுத்து சென்று கைவிட்டுள்ளனர் என்கிறது CNN செய்தி.
படம் CNN:

இந்தியா இதுவரை இந்த செய்தியை மறுக்கவில்லை.
ரோஹிங்கியா அகதிகளை கொண்ட நாடுகள்:
பங்களாதேஷ்: 1.17 மில்லியன் அகதிகள்
பர்மா: 636,000 அகதிகள்
பாகிஸ்தான்: 400,000 அகதிகள்
சவுதி: 340,000 அகதிகள்
மலேசியா: 210,000 அகதிகள்
இந்தியா: 30,000 அகதிகள்