அமெரிக்க H-1B வேலைவாய்ப்பு விசாவுக்கு சனாதிபதி ரம்ப் வெள்ளிக்கிழமை புதிதாக $100,000 கட்டணத்தை அறிவித்துள்ளார். ஆனால் வழமைபோல் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த புதிய கட்டணம் இந்தியாவையே அதிகம் பாதிக்கும். 2024ம் ஆண்டு 71% H-1B விசா இந்தியரால் பெறப்பட்டுஉள்ளது. சீனரால் 11.7% H-1B விசா பெறப்பட்டுஉள்ளது.
அமெரிக்க H-1B வேலைவாய்ப்பு விசா அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்டாலும், இது பெரும்பாலும் தொழிநுட்ப துறை ஊழியர்களுக்கு பயன்படுகிறது. இது முதலில் 3 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும். பின்னர் இது புதுப்பிக்கப்படாலம்.
அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 65,000 H-1B விசாவை வழங்குகிறது. அத்துடன் மேலும் 20,000 வேலைவாய்ப்பு விசாவை PhD போன்ற உயர் படிப்பு கொண்டோருக்கு வழங்கிகிறது.
H-1B விசாவில் அமெரிக்கா செல்வோர் பொதுவாக அங்கு குடியுரிமை பெற்றுக்கொள்வர். இதை மனதில் கொண்டோர் குறைந்த ஊதியத்துக்கே அமெரிக்க வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வர்.
அத்துடன் $1 மில்லியன் கட்டணம் செலுத்துவோருக்கு விரைவாக அமெரிக்கா செல்ல ரம்ப் Gold Card விசாவை நடைமுறை செய்கிறார்.