2016ம் ஆண்டு முதல் முறை சனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட காலத்தில் ரம்ப் ‘I am your voice” என்று மட்டுமே கூறியிருந்தார். ஆனால் 2023ம் ஆண்டு இரண்டாம் தடவை சனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட காலத்தில் ரம்ப் எனக்கு குற்றம் செய்தவர்களுக்கு நான் பழிவாங்குபவர் (retribution) என்று மிரட்டி இருந்தார். அவ்வகையில் பல அமெரிக்க உயர் அதிகாரிகள் தற்போது பழிவாங்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று 16ம் திகதி ரம்ப் அரசு John Bolton மீது அரச இரகசியங்களை முறைப்படி கையாளவில்லை என்று குற்றம் சுமத்தி, அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவரின் வீடு ஆகஸ்ட் 22ம் திகதி FBI யினால் தேடுதல் செய்யப்பட்டது. முன்னர் ரம்பின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த Bolton பின் ரம்பை சாடியமையே ரம்பின் பழிவாங்கலுக்கு காரணம்.
அக்டோபர் 9ம் திகதி Letitia James என்ற முன்னாள் நியூ யார்க் நகர Attorney General மீதும் ரம்ப் bank fraud வழக்கு தாக்கல் செய்துள்ளார். Letitia முன்னர் ரம்புக்கும், அவரின் 3 பிள்ளைகளுக்கும் எதிராக civil fraud வழக்கு தாக்கல் செய்து, அவர்களை வெற்றிகரமாக தண்டித்து இருந்தவர்.
செப்டம்பர் 25ம் திகதி முன்னாள் FBI director James Comey மீது ரம்ப் obstruction மற்றும் false statements குற்றங்கள் தொடர்பாக ரம்ப் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். இவர் ரம்ப் ரஷ்யாவுடன் இணைந்து (colluded) அரசியல் செய்தாரா என்பதை விசாரித்தவர்.
ரம்புக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் உதவி சனாதிபதி கமலா ஹாரிஸின் பாதுகாப்பு சேவையையும் ரம்ப் பறித்து இருந்தார்.
ஜெனரல் Mark Milley என்ற முன்னாள் Joint Chiefs of Staff மீதும் ரம்ப் விசாரணை செய்கிறார்.
சுமார் 25 முன்னாள் அரச அதிகாரிகள் இவ்வாறு ரம்பால் பழிவாங்கப்படுகின்றனர்.