இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்தவுள்ளது என்று இந்திய பிரதமர் மோதி தனக்கு கூறியதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கடந்த புதன்கிழமை கூறியிருந்தார்.
ஆனால் அவ்வாறு மோதி கூறவில்லை என்று இந்தியா ரம்பின் கூற்றை மறுத்து இருந்தது.
பின் வியாழன் இந்தியா தனது ரஷ்ய எரிபொருள் கொள்வனவை 1/2 பங்கால் குறைத்து உள்ளது என்று வெள்ளை மாளிகை கூறியது. அதையும் இந்தியா மறுத்தது.
ஞாயிறு மீண்டும் ரம்ப் ” I spoke with Prime Minister Modi of India, and he said he’s not going to be doing the Russian oil thing” என்று மீண்டும் கூறியுள்ளார்.
ரம்புக்கு பொய், பிரட்டு சாதாரணமான ஒன்றுதான். ஆனால் ஏன் மோதி இந்த குழப்பத்தை பகிரங்கமாக தெளிவுபடுத்த பின்வாங்குகிறார்? ரம்ப் கூறுவதுபோல் தான் கூறவில்லை என்று நேரடியாக கூறுவதற்கு ஏன் மோதி மறுக்கிறார்?
இந்திய பொருட்கள் மீது ரம்ப் தற்போது 50% மேலதிக இறக்குமதி வரி விதித்துள்ளார். அதில் 25% இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு வழங்கும் தண்டனை.
