முன்னாள் பிரெஞ்சு சனாதிபதியின் 5 ஆண்டு சிறை ஆரம்பம் 

முன்னாள் பிரெஞ்சு சனாதிபதியின் 5 ஆண்டு சிறை ஆரம்பம் 

2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்சின் சனாதிபதியாக பதவி வகித்த சர்கோஸி (Nicolas Sarkozy) தனது 5 ஆண்டு சிறை தண்டனையை தொடர பாரிஸில் உள்ள La Sante சிறைச்சாலைக்கு செவ்வாய் சென்றுள்ளார்.

தற்போது 70 வயதான சரோஸ்கி முன்னாள் லிபிய (Libya) தலைவர் கடாபியிடம் இருந்து பல மில்லியன் டாலர்கள் இலஞ்சம் பெற்று தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

சரோஸ்கிக்கு 9 முதல் 12 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சிறையும், மாதம் 14 யூரோ செலவில் தொலைக்காட்சியும், தொலைபேசியும் வழங்கப்படும்.

இவரை சிறையில் இருந்து விடுவிக்க தேவையான பணிகள் ஏற்கனவே இவர் தரப்பால் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.