இரண்டாம் ரம்ப்-பூட்டின் சந்திப்பை கைவிட்டார் ரம்ப் 

இரண்டாம் ரம்ப்-பூட்டின் சந்திப்பை கைவிட்டார் ரம்ப் 

யூக்கிறேன் யுத்த நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய சனாதிபதி பூட்டினை ஹங்கேரி என்ற நாட்டில் இரண்டாம் தடவையும் நேரடியாக சந்தித்து உரையாடும் முயற்சியை அமெரிக்க சனாதிபதி ரம்ப் கைவிட்டு உள்ளார்.

அண்மையில் அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் இடம்பெற்ற முதலாவது நேரடி சந்திப்பும் பயன் எதையும் வழங்கி இருக்கவில்லை. இரண்டாம் சந்திப்பும் அவ்வாறே அமையும் என்ற கணிப்பு ரம்பை சூழ்ந்திருக்கலாம்.

அத்துடன் ரம்ப் ரஷ்யாவின் Rosneft, Lukoil ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீதும் தடை விதித்துள்ளார்.

ஆனாலும் ரம்ப் யூகிறேன் கேட்டபடி அமெரிக்காவின் Tomahawk cruise missile வகை ஏவுகணைகளை வழங்க மறுத்துள்ளார். இந்த ஏவுகணைகள் எதிரியின் ரேடார் கண்களில் அகப்படாது தரை மடத்தில் சென்று தாக்க வல்லன. சுமார் 6.2 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 2,500 km தூரம் வரை சென்று தாக்க வல்லது.

ரஷ்யா உடனே தரை, வான், மற்றும் நீர்மூழ்கிகள் மூலம் ஏவப்படும் அணு ஆயுதங்களுடன் கூடிய இராணுவ பயிற்சி ஒன்றை செய்துள்ளது.