இலங்கையின் வடக்கே மீண்டும் சீனாவின் சூரிய சக்தி மற்றும் காற்று மூலமான மின் உற்பத்தி நடவடிக்கைகள்ஆரம்பமாகலாம். முனைய சில திட்டங்கள் முறிந்து போனதாலேயே மீண்டும் சீனா வடக்கே முதலீடும் வாய்க்கு தோன்றியுள்ளது.
2021ம் ஆண்டு நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய 3 தீவுகளிலும் சூரிய சக்தி மூலமான மின்னை உற்பத்தி செய்யும் உரிமை சீனாவின் Sinosar-Etechwin நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால் மேற்படி திட்டம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் என்று இந்தியா அடம்பிடித்தால் இரத்து செய்யப்பட்டிருந்தது. உடனே அந்த சீன நிறுவனம் மாலைதீவு சென்று அங்கோர் சூரிய சக்தி திட்டத்தை செய்தது.
2022ம் ஆண்டு கோத்தபாய காலத்தில் இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு பூநகரி, மன்னார் போன்ற இடங்களில் காற்றாலை மின்சத்தி உற்பத்தி உரிமை வழங்கப்பட்டது. இந்திய பிரதமர் மோதியின் அழுத்தம் காரணமாகவே அதானிக்கு இந்த திட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த குற்றச்சாடை கோத்தபாய மறுத்து இருந்தார்.
பின்னர் ராஜபக்ச குடும்பத்தின் உதவியுடன் பதவிக்கு வந்திருந்த ரணிலும் அதானி கொண்டிருந்த உரிமையை தொடர்ந்தார்.
ஆனால் பின்வந்த அனுர அரசின் மேற்படி திட்டம் தொடர்பான விசாரணைகளும், அமெரிக்காவின் அதானி மீதான விசாரணையும் அதானி மேற்படி திட்டத்தை கைவிட காரணமாகின.
அந்த திட்டங்களை இலங்கை அரசு மீண்டும் ஆரம்பிக்க புதிய கேள்விகளை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
