அமெரிக்க சனாதிபதி ரம்ப் பலத்த நெருக்கடிகள் மத்தியில் சீன சனாதிபதி சீயை இன்று வியாழன் தென் கொரியாவில் நேரடியாக சந்திக்கவுள்ளார். இன்று இவர்கள் இருவரும் ஒரு முழுமையான பொருளாதார தீர்வை அடையாவிடில் ரம்ப் பலத்த எதிர்ப்புகளை ஆதரவாளர் மத்தியில் சந்திக்க நேரிடும்.
ரம்பை நன்கறிந்த சீனா இந்த சந்திப்பதை முடிந்த அளவு தணித்தே பேசி வருகிறது. சந்திப்பும் முடிந்த அளவு இறுதி நேரத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. APAC அமர்வுக்கு செல்லும் சீ தரை இறங்கியவுடன் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ள ரம்பை Busan நகரத்து Gimhae விமான நிலையத்தில் சந்திப்பார்.
ரம்பை நெருக்கும் விசயங்களில் சோயா முன்னிலையில் உள்ளது. அமெரிக்க சோயா உற்பத்தியாளர் பலத்த ரம்ப் ஆதரவாளர். அனால் அவர்கள் தற்போது தமது சோயாவை விற்பனை செய்ய முடியாது தவிக்கின்றனர். சீனாவே அமெரிக்க சோயாவை கொள்வனவு செய்யும் முதல் நாடு. 2024ம் ஆண்டு அமெரிக்கா $24 பில்லியன் பெறுமதியான சோயாவை ஏற்றுமதி செய்திருந்தது. அதை சுமார் அரை பங்கு சீனா சென்றிருந்தது.
Eclectic கார், சூரிய சக்தி மூலம் மின்னை உருவாக்க பயன்படும் solar panel, இராணுவ ஆயுதங்கள் ஆகியவற்றின் தயாரிப்புக்கு மிக அவசியமான critical minerals சீனாவிடமே அதிகம் உள்ளன. அவற்றை சீனா அமெரிக்காவுக்கு வழங்காது தடுத்து வருகிறது. இந்த தட்டுப்பாடும் அமெரிக்காவை நெருக்கி வருகிறது.
சீன பொருட்கள் மீது ரம்ப் திணித்த மேலதிக இறக்குமதி வரி, TikTok போன்ற விசயங்கள் சீனாவை பாதித்தாலும் தற்போது சீனா அவற்றுக்கு முகம்கொடுக்க பழகி கொண்டுள்ளது.
 
									