செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற பல தேர்தல்கள் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கும் அவரின் Republican கட்சிக்கும் பெரும் தோல்வியை வழங்கியுள்ளன.
நியூ யார்க் நகரின் முதல்வராக Zohran Mamdani என்ற இஸ்லாமியர் வெற்றி பெற்றுள்ளார். இவரை ரம்ப் தேர்தல் காலத்தில் “100% communist lunatic” என்று வசைபாடி இருந்தார். Mamdani வெற்றி பெற்றால் நிதி வழங்கமாட்டேன் என்றும் ரம்ப் நியூ யார்க் நகர வாக்காளரை மிரட்டி இருந்தார். அத்துடன் ரம்ப் Andrew Cuomo என்பவரை முதல்வராக தெரிவு செய்ய கேட்டிருந்தார். Mamdani யின் மனைவி அமெரிக்காவில் சிரியா நாட்டு பெற்றாருக்கு பிறந்த இஸ்லாமியர்.
Virginia, New Jersey ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ரம்பின் எதிரணியான Democratic கட்சியினர் ஆளுநர் பதவிகளை வென்றுள்ளனர்.
ஏனைய தேர்தல் முடிவுகளும் ரம்புக்கும், அவரின் Republican கட்சிக்கும் தோல்வியாகவே அமைந்துள்ளன.
இந்நிலை தொடந்தால் 2026ம் ஆண்டு இடம்பெறவுள்ள நாடளாவிய midterm தேர்தல்கள் ரம்புக்கு தோல்விகளை வழங்கி காங்கிரசையும் Democratic கட்சிக்கு வழங்கலாம். அவ்வாறு நிகழ்ந்தால் மிகுதி காலத்தில் ரம்ப் முடங்கி இருக்க நேரிடும்.
