Tesla என்ற மின்னில் இயங்கும் EV வாகன உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்து, தற்போதும் அதன் CEO ஆக பதவி வகிக்கும் இலான் மஸ்க்குக்கு $1 டிரில்லியன் ($1,000 பில்லியன்) பெறுமதியான பங்குகளை ஊதியமாக வழங்க அந்த நிறுவனத்தின் பங்காளிகள் அனுமதி வழங்கி உள்ளனர்.
இவ்வகை ஊதியம் கிடைத்தால் தற்போது உலகின் முதலாவது செல்வந்தரான இலான் மஸ்க் உலகின் முதலாவது trillionaire ஆவார். ஆனால் அவ்வாறு நிகழ்வது சாத்தியமா?
இந்த ஊதியத்தை பெற இலான் பல சாதனைகளை செய்யவேண்டும்.
முதலாவது Tesla பங்கு ஒவ்வொன்றின் பெறுமதியையும் தற்போதைய பெறுமதியின் 6 மடங்கு ஆக்க வேண்டும். அதாவது தற்போது சுமார் $1.5 டிரில்லியன் பெறுமதியான டெஸ்லா சுமார் $9 டிரில்லியன் பெறுமதியை அடைய வேண்டும். EV வாகன சந்தையில் போட்டிகள் நிறைந்த உலகில் அது சாத்தியமா?
இரண்டாவது அடுத்த 10 ஆண்டுகளில் Tesla மொத்தம் 20 மில்லியன் EV வாகனங்களை விற்பனை செய்யவேண்டும்.
மூன்றாவது இவர் குறைந்தது 1 மில்லியன் மனிதனை போன்று இயங்க வல்ல robot களை சந்தைப்படுத்த வேண்டும்.
மஸ்கின் ரம்புடனான முன்னைய அரசியல் உறவு காரணமாக பல Tesla விரும்பிகள் அதற்கு எதிராக மாறி உள்ளனர். அதனால் பல இடங்களில் Tesla விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜெர்மனியில் Tesla விற்பனை 50% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. BYD போன்ற சீன EV நிறுவங்களின் போட்டியும் உக்கிரம் அடைந்துள்ளன. இந்நிலையில் மஸ்க் மேற்படி ஊதியத்தை அடையும் சாத்தியம் மிக குறைவே.
மஸ்கின் தற்போதைய வெகுமதி சுமார் $493 பில்லியன். சுமார் 110 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அமெரிக்காவில் வாழ்ந்த John Rockefeller என்ற ரயில் வர்த்தகரின் சொத்துக்களின் தற்போதைய பெறுமதி சுமார் $630 பில்லியன்.
