சனாதிபதி ரம்பின் அமெரிக்க மத்திய அரசு (federal government) 40 தினங்களையும் தாண்டி முடங்கி உள்ளது. அமெரிக்க மத்திய அரசின் புதிய வரவு செலவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாமையே இந்த முடக்கத்துக்கு காரணம்.
முடக்க காலத்தில் அரச ஊழியர்கள் ஊதியம் பெறார். அதனால் அவர்களின் வரவு குறைந்து, அரச சேவைகள் குறையும்.
உதாரணமாக விமான வழிநடத்தல், விமான நிலைய பாதுகாப்பு போன்ற சேவைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இன்று மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட சேவைகள் அமெரிக்காவில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது ரம்பின் Republican கட்சியே காங்கிரசின் House, Senate ஆகிய இரண்டு அவைகளிலும் பெரும்பான்மைகளை கொண்டிருந்தாலும் 100 உறுப்பினரை கொண்ட Senate இல் 53 உறுப்பினர் மட்டுமே Republican. அமெரிக்க சட்டப்படி வரவு செலவு திட்டத்தை ஏற்றுக்கொள்ள குறைந்தது 60 வாக்குகள் தேவை.
இதற்கு முன் ரம்பின் முதலாம் ஆட்சியில் 35 தின முடக்கமும், பில் கிளின்டன் ஆட்சியில் 21 தின முடக்கமும், ஒபாமா ஆட்சியில் 16 தின முடக்கமும் இடம்பெற்றன.
