அமெரிக்க யூத குடும்பத்தில் பிறந்து, Yale மற்றும் Harvard பல்கலைக்கழகங்களில் பயின்று, Princeton பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பதவி வகித்து, ஐ.நா. வின் விசேட Rapporteur அதிகாரியாக பதவி வகித்த 95 வயது Richard Falk என்பவரை கனடிய எல்லை அதிகாரிகள் 4 மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.
இவர் Ottawa நகரில் வெள்ளி, சனி இடம்பெற இருந்த “Palestine Tribunal on Canadian Responsibility” என்ற பலஸ்தீன அமர்வு ஒன்றுக்கு செல்ல வியாழன் Toronto விமான நிலையம் வந்தபோதே 4 மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார்.
விசாரணை செய்யப்பட்ட தினம் (நவம்பர் 13) அவரின் 95 ஆவது பிறந்த தினமாகும்.
தன்னை விசாரித்த கனடிய அதிகாரிகள் பலஸ்தீன-இஸ்ரேல் தொடர்பான கேள்விகளை கேட்டதாக கூறியுள்ளார் Richard Falk. அதற்கும் கனடிய பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு? அதுவும் பலஸ்தீன நாட்டை கனடா ஏற்றுக்கொண்ட பின். கேட்ட கேள்விகள் இந்த விசாரணை ஒரு random விசாரணை அல்ல என்பதையும் உணர்த்துகிறது.
இவரின் நீண்ட விசாரணையை அறிந்த tribunal அமர்வு அதிகாரிகள் உயர் பதவியில் உள்ள கனடிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட பின்னரே Falk விடுதலை செய்யப்பட்டார்.
Yuen Pau Woo என்ற கனடிய செனட்டர் தன்னையும் அமர்வு அதிகாரிகள் தொடர்பு கொண்டதாக கூறியுள்ளார். இந்த செனட்டர் மேற்படி விசாரணையை கடுமையாக கண்டித்துள்ளார்.
இங்கே நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் கனடாவில் பயங்கரவாதிகள் என்று தடை செய்யப்பட்ட புலிகளுக்கு அடிவருடி, ரூடோவின் ஆதரவுடன் Liberal கட்சிக்குள் பின் கதவால் புகுந்து, புலி ஆதரவு தமிழர் தொகுதியில் வென்ற கரி ஆனந்தசங்கரியே மேற்படி விசாரணைக்கு பொறுப்பான கனடாவின் Public Safety அமைச்சராக உள்ளார்.
இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?
