இஸ்ரேல் காசாவில் செய்யும் கொடுமைகள் காரணமாக இஸ்ரேலை Eurovision பாட்டு போட்டியில் இருந்து விலத்தாதால் அயர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, ஸ்லோவேனிய (Slovenia) ஆகிய நாடுகள் தாம் 2026ம் ஆண்டு Eurovision போட்டியில் பங்கு கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளன.
நெதர்லாந்தின் ஒளிபரப்பு நிறுவனமான AVROTROS, ஸ்பெயின் நிறுவனமான RTIVE ஆகியன இந்த அறிவிப்பை செய்துள்ளன. இந்த நாடுகள் இஸ்ரேலின் KAN என்ற ஒளிபரப்பு நிறுவனம் போட்டியில் பங்கு கொள்வதை தடை செய்ய கேட்டிருந்த.
1956ம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் இந்த பாட்டு போட்டி தற்போது சுமார் 100 மில்லியன் பார்வையாளரை கொண்டுள்ளது.
Eurovision போட்டியை நிகழ்த்தும் European Broadcasting Union (EBU) ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்ததால் 2022ம் ஆண்டு அதை தடை செய்ததுபோல் இஸ்ரேலையும் தடை செய்ய வேண்டும் என்கின்றன மேற்படி நாடுகள். ஆனால் EBU ரஷ்யா மீது திணித்த சட்டத்தை இஸ்ரேல் மீது நடைமுறை செய்ய மறுத்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரித்தானியா, இத்தாலி ஆகியன இந்த போட்டிக்கு அதிக வருமானத்தை தரும் Big Five என்று அழைக்கப்படும் 5 பிரதான நாடுகள். அதில் உள்ள ஸ்பெயின் வெளியேறுவதால் Eurovision 2026ம் ஆண்டில் பெருமளவு வருமானத்தை இழக்க நேரிடும்.
மேலும் சில நாடுகளும், சில பாடகர்களும் கூடவே 2026 போட்டியை தவிர்க்கும் சந்தர்ப்பமும் உண்டு.
