தற்போது Artificial Intelligence (AI) போன்ற அதி உயரிய தொழில்நுட்பங்களுக்கு தேவையான இலகுவில் கிடைக்காத critical minerals என்று அழைக்கப்படும் கனியங்கள் 80% வரை சீனாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இது அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளினதும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பாரிய இடராக உள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தம்மை விடுவிக்க அமெரிக்க சனாதிபதி ரம்ப் புதிதாக தன் நம்பிக்கைக்கு உரிய நாடுகளை கொண்ட Pax Silica என்ற ஒரு அணியை ஆரம்பித்து உள்ளார். இந்த அணியில் உள்ள நாடுகள் சொந்தமாக critical minerals கனியங்களை கொண்டிருக்க வேண்டிய supply chian ஐ உருவாக்கும்.
ஆனால் சீனாவுக்கு எதிராக அமைக்கும் இந்த அணியில் இந்தியாவை ரம்ப் இணைக்கவில்லை. ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரித்தானியா, அஸ்ரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே ஆரம்ப உறுப்பினர் நாடுகளாக இணைக்கப்பட்டு உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, கனடா, UAE ஆகியனவும் பார்வையாளர் நாடுகளாக இணைக்கப்பட்டு உள்ளன.
இந்த அணியில் இந்தியாவை இணையாமை இந்தியா மீது ரம்ப் கொண்டுள்ள நம்பிக்கை இன்மையையே காட்டுகிறது. இந்திய அரசு இது தொடர்பாக பேசுவதை தவிர்த்து வருகிறது.
மோதி தலைமையிலான இந்தியா ஒரு முழு சுதந்திர நாடாக வளரவும், அதேவேளை முழு சுதந்திர நாடான அமெரிக்காவுடன் இணைந்து பயன்களை அடையவும் விரும்புகிறது. ஆனால் அது ஒரு இலகுவான காரியம் அல்ல. அமெரிக்காவுக்கு பணிந்த நாடுகளையே அமெரிக்கா உள்ளடக்கும். சீனா வேறு நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லாமலேயே வளர்கிறது.
