அண்மையில் இலங்கையை தாக்கிய சூறாவளி டித்வா (Ditwah) இலங்கைக்கு சுமார் $4.1 பில்லியன் இழப்பை ஏற்படுத்தி உள்ளது என்று World Bank திங்கள் கூறியுள்ளது. அத்துடன் இந்த சூறாவளிக்கு 647 பேர் வரை பலியாகி உள்ளனர்.
வீடுகளின் பாதிப்பு, வீதிகளின் பாதிப்பு, பால உடைவுகள், ரயில் பாதை உடைவுகள், கட்டிட உடைவுகள், நீர் வழங்கல் பாதிப்பு, விவசாய நில பாதிப்புகள் எல்லாம் மேற்படி கணிப்பில் அடங்கும்.
வீதி, பால, ரயில் பாதை, நீர் வழங்கல் அழிவுகளின் தொகை சுமார் $1.735 பில்லியன் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. வீடுகளின் பாதிப்பு தொகை $562 மில்லியன் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது.
மேற்படி தொகை இலங்கை GDP யின் 4% க்கும் மேலானதாகும்.
சூறாவளி அழிவுகளை திருத்த இதுவரை IMF $206 மில்லியன் உதவியும், World Bank $120 மில்லியன் உதவியும் வழங்க முன்வந்துள்ளன.
இந்த சூறாவளியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட நட்டம் மேற்படி தொகையில் அடங்கவில்லை.
