கொழும்புக்கும் சீன தலைநகர் பெய்ஜிங்க்கும் (Beijing) இடையில் புதிய நேரடி விமான சேவையை சீனாவின் Beijing Capital Airlines விமான சேவை 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளது.
Beijing Capital Airlines சுமார் 80 விமானங்களை கொண்ட மலிவு விலை விமான சேவை என்றாலும் இதன் தாய் நிறுவனமான Hainan Airlines சுமார் 220 விமானங்களை கொண்ட பெரிய விமான சேவை. Hinan வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சேவை செய்யும் விமான சேவை. அதனால் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பயணிகள் இலங்கை செல்ல மேலும் ஒரு வழி கிடைக்கும்.
Beijing Capital Airlines பயண சீட்டுகளை Hainan Airlines இணையத்திலேயே பெற முடியும். கொழும்பு-பெய்ஜிங் சேவையின் ஒரு வழி பயணத்துக்கு சுமார் 8:35 மணி நேரம் தேவைப்படும்.
இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 121,671 சீன பயணிகள் இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் நடுப்பகுதி வரையான காலத்தில் இந்தியாவில் இருந்து 495,952 பயணிகளும் , ரஷ்யாவில் இருந்து 168,616 பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 138,119 பயணிகளும், சீனாவில் இருந்து 127,073 பயணிகளும் இலங்கை வந்துள்ளனர்.
