அண்மையில் decalcified அமெரிக்க முன்னாள் சனாதிபதி ஜோர்ஜ் (மகன்) புஷ்சின் (George Bush) பூட்டினுடனான (Putin) உரையாடல் transcript இருவரும் 2001ம் ஆண்டே, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் வளர்ச்சியால் மிரண்டு உள்ளதை காட்டுகிறது.
2001ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் திகதி ஜோர்ஜ் புஷ், Condoleezza Rice ஆகியோர் பூட்டினை Slovenia வின் Brdo Castle என்ற இடத்தில் சந்தித்து செய்த உரையாடலே தற்போது declassified செய்யப்பட்டுள்ளது.
இந்த உரையாடல் பல நரி தந்திரங்களை, குழி பறிப்புகளை காட்டியுள்ளது.
அந்த சந்திப்பில் புஷ் “ரஷ்யா மேற்குக்கு உரியது; இது எதிரி அல்ல. மேலும் 50 ஆண்டுகளில் சீனா பெரியதோர் ஆபத்து ஆகும்” என்று பூட்டினுக்கு கூறினார். (“Russia belongs to the West; it is not an enemy. In 50 years China could become a big problem”).

புஷ்சின் மேற்படி கூற்றுக்கு பின்னர் பதிலளித்த பூட்டின் “எனக்கு தெரியும். நான் என்றைக்குமே உங்களை எதிரியாக கருதவில்லை. Cold War காலத்திலும் அவ்வாறு கருதவில்லை. நான் உங்களுடன் உடன்படுகிறேன், நான் நீங்கள் 50 ஆண்டுகளில் சீனாவின் நிலை தொடர்பாக கூறியதை குறிப்பு எடுத்துள்ளேன். நாங்கள் கவனமாக கண்காணிப்போம்” என்றுள்ளார். (I know. I never considered you a threat. Even during the Cold War. I agree and I wrote down what you said about China and 50 years. We are watching carefully.)

புஷ் ஈரானுக்கு உதவ வேண்டாம் என்று கூறியதையும் பூட்டின் ஏற்றுக்கொண்டுள்ளார். அக்காலத்தில் ஈரான் ரஷ்யாவின் S-300 தடுப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய விரும்பி இருந்தாலும், மேற்கின் விருப்பத்துக்கு ஏற்ப பூட்டின் அதை இழுத்தடித்து வந்துள்ளார். பின் 2007ம் ஆண்டே S-300 விற்பனை ஆரம்பமானது. பின் 2010ம் ஆண்டு பூட்டின், மேற்கின் விருப்பத்துக்கு ஏற்ப, மீண்டும் S-300 விற்பனையை இடை நிறுத்தினார். இறுதியில் 2015ம் ஆண்டு அளவிலேயே ஈரான் S-300 களை பெற்றது. அப்போது S-300 ஒரு மிக பழைய தொழில்நுட்பம்.
ஆனால் யூக்கிறேனுடனான யுத்தத்தில் பலத்த இழப்புகளை எதிர்கொண்ட பூட்டின் ஈரானுக்கு ஓடி சென்று ஈரானின் ஆளில்லா ஏவுகணைகளை கொள்வனவு செய்து, பிரதி செய்து தற்போது தாமே உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார். பின் அமெரிக்கா ஈரானை தாக்கும்போது பூட்டின் ஈரானின் உதவிக்கு வரவில்லை.
புஷ் குறிப்பிட்ட 50 ஆண்டுகள் 2051ம் ஆண்டு ஆகும் (2001+50=2051). அமெரிக்காவும், ரஷ்யாவும் பிரமித்தபடி சீனா 2051ம் ஆண்டில் உலகின் முதலாவது வல்லரசாக இருக்கும்.
